×

×

மா உலா நிறுவனருக்கு NEIGHBOURHOOD HEROES விருது வழங்கிய *HDFC*வங்கி

28, Aug 2020
கொரோனா நோய் தொற்று ஊரடங்கு  (COVID'19) பேரிடர் கால கட்டத்தின் போது அசாதாரண சூழலில் *சுமார் 2700 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கி* சமூகப் பணியற்றிய எங்களின் *மா உலா அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மா உலா திட்டத்தின் நிர்வாக இயக்குநர் முனைவர் சே.ப. முகம்மது கதாபி அவர்களுக்கு*  , *HDFC Bank* சார்பில் *"2020 ஆம் ஆண்டில் சிறந்த NEIGHBOURHOOD HEROES"* என்று அங்கீகரிக்கப்பட்டதில் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.  இந்த அங்கீகாரத்தை எங்களுக்கு வழங்கிய  *HDFC வங்கி நிர்வாகத்திற்கு மிக்க நன்றி.*  இது சமூகத்தின் முன்னேற்றத்திற்காக எங்கள் தன்னார்வலர்கள் தங்கள் சமூக செயல்பாடுகளை  மேலும் தொடர ஊக்குவிக்கும்!
 மேலும், எங்களுக்கு ஆதரவளித்த மற்றும் பரிந்துரைத்து உதவிய *அண்ணன் திரு. சந்திரசேகர்* அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.இப்படிக்கு 
*மா உலா நிர்வாகம்*