×

×

செய்திகள்

மதுராந்தகத்தில் மா உலா வேலை வாய்ப்பு முகாம்

 13/01/2020 அன்று we are your voice - நிறுவனம் மதுராந்தகத்தில் நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான சுய வேலை வாய்ப்பு முகாமில் மா உலா நிறுவனம் பங்கேற்றது. இதில் மா உலா நிறுவனத்தில் சுமார் 12 பேர்கள் இணைந்தனர். மேலும் பலர் மா உலா விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர். இதனிடையே அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் .IAS அவர்கள் மா உலா திட்டத்தைப் பற்றி கேட்டறிந்து, இது சிறப்பான திட்டம் என்று மா உலா நிறுவனர் முனைவர் சே.ப. முகம்மது கதாபி அவர்களை கைகொடுத்து பாராட்டினார். இந்த நிகழ்வில் மா உலா முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வை ஏற்பாடு செய்ய We are your voice - நிறுவனத்தின் நிறுவனர் திரு. பாசித் மற்றும் அந்நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கும் மா உலா நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு

மா உலா நிர்வாகம்
முழு விவரங்களையும் படிக்க
மதுரையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

25-12-2019  மதுரையில் மா உலா நிறுவனத்திற்கும் சரவணா மூலிகை சிக்கன் நிறுவனத்திற்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொழுத்திடப்பட்டது. இதன் மூலம் மதுரையைச் சேர்ந்த மா உலா ஓட்டுனர்கள் பயனடைவார்கள். உடன் மா உலா மதுரை நிர்வாகிகள் இருந்தனர்.

முழு விவரங்களையும் படிக்க
விரைவில் புது டில்லியில் மா உலா திட்டம் தொடங்கும்

புது டில்லியில் மா உலா திட்டத்தின் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் மா உலா திட்டம் புது டில்லியில் எப்படி செயல்படுத்துவது போன்ற கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. சில மாறுதல்களுடன் மா உலா திட்டம் புது டில்லியில் விரைவில் தொடங்கப்படும் என்று மா உலா திட்ட நிர்வாக இயக்குனர் முனைவர் சே.ப. முகம்மது கதாபி தெரிவித்தார்.