×

×

உலகின் முதல் மாற்றுத்திறனாளிகளால் இயக்கப்படும் ( BIKE TAXI )

இந்தியாவின் முதல் ( BIKE TAXI ) பைக் சவாரி சேவையும் இதுவே.

ஏன் மா உலாவில் பயணிக்க வேண்டும் ?

விரைவு மற்றும் பாதுகாப்பு

விரைவாக செல்ல ஒரு எளிய வழி தேடி ஓடும் மக்களுக்காக இந்த மா உலா சேவை தொடங்கியது. விரைவாக சென்றாலும் அதிலும் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதையும் கருத்தில் கொண்டு பின் இருக்கையிலிருந்து பயணிப்பவருக்கும் தலைகவசம் அளிக்கும் சிறப்பான சேவை.

விரும்பும் இடத்தில், விரும்பும் நேரத்தில்

எங்கு இருந்து அழைத்தாலும் அந்த இடத்திற்கு சென்று அவர்கள் விரும்பும் நேரத்தில் சரியான சேவையை மா உலா செயல்படுத்தி வருகிறது. விரும்பிய இடத்திலும் விரும்பிய நேரத்திலும் சேவை செய்வதே இந்நிறுவனத்தின் சிறப்பம்சமாகும்.

எளிய உலா எளியவர்களுக்கான உலா

எளியவர்களின் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு எளிமையாக அணுகக்கூடியவர்களை கொண்டு நடத்தப்படும் மா உலா எளியவர்க்கும், வலியவர்க்கும் எளிய உலாவாக அமைகிறது.

மாற்று போக்குவரத்து மாற்றும் போக்குவரத்து

அதிக ஊர்தி போக்குவரத்து நிறைந்த சாலைகளில் விரைவாக செல்ல மாற்று போக்குவரத்து இன்றியமையாதவையாக அமைகிறது. அந்த போக்குவரத்து சிக்கலை மாற்று வழி வாயிலாக மாற்றியமைப்பதே இந்த மா உலா சேவை.

அவசரம் ஆனால் அவசியம்

இன்றைய அவசர உலகில் விரைவாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல போக்குவரத்து வசதி மிகவும் அவசியம் அந்த அவசரத்தின் அவசியத்தை உணர்ந்தே மா உலா நிறுவனம் செயலாற்றி வருகிறது.

இரவு உலா இனிய உலா

இரவில் தனிமனிதனாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டுமானால் அதிக தொகை செலவு செய்ய வேண்டிய நிலையுள்ளது. இதனை எளிமையான வழியாக மாற்றவே மா உலா சேவை தொடங்கப்பட்டுள்ளது. இரவு உலா இனிமையான உலாவாக அமைய மா உலாவில் பயணியுங்கள்.

மா உலாவில் ஏன் இணைய வேண்டும்

மா உலா நிறுவனம் பல்வேறுபட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தொடர்ந்து 4 – ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனமானது கால்கள் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் இந்த மா உலா நிறுவனமானது இதுவரை மூன்றரை ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளிடமிருந்து ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் கல்வி அளவிலும் பொருளாதார அளவிலும் சமூகத்தில் பின்தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகவே அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த மா உலா என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி மாற்றுத்திறனாளிகளுக்காக சேவையாற்றி வருகிறது. இந்த திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுவதோடு மாற்றுத்திறனாளிகள் தன்மானத்தோடு வாழ வழிவகுக்கும். ஒரு மாற்றுத்திறனாளி பொருளாதாரத்திற்காக யாரையும் சார்ந்து வாழாமல் தன்மானத்தோடு தன் வாழ்க்கையை வாழ இந்த மா உலா திட்டத்தில் இணைந்து பயணிப்பதே ஆகச் சிறந்த வழியாகும்.

இலவச பதிவு

சமீபத்திய செய்திகள்

சிறந்த சமூக சேவை வழங்குபவர் விருது
05, Nov 2019


9-10-2019 அன்று  மதுரையில் ( Visual Trust) சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது , இதில் மா உலா திட்டத்தை உருவாக்கி அதை மதுரையில்நடைமுறைக்கு கொண்டு வந்தமைக்கு மா உலா திட்ட இயக்குநர் முனைவர் சே.ப. முகம்மது கதாபி அவர்களுக்கு சிறந்த சமூக சேவை வழங்குபவர் விருது வழங்கி கௌரவித்தனர். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த Visual Trust - தலைவர் திரு. பாண்டியன் ஐயா அவர்களுக்கும் அந்நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இப்படிக்கு
மா உலா நிர்வாகம்

#மாஉலா செயலி .....
03, Oct 2019

மா உலா செயலியை பயன்படுத்த எளிய வழி கீழேயுள்ள QR ஸ்கேன் செயுங்கள் எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் ...

மா உலா மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்
03, Oct 2019


வரும்( 05-10-2019) சனிக்கிழமை ,காலை 11 மணி முதல் பகல் 02.00 மணி வரை மா உலா மாவட்ட நிர்வாகிகள் கலத்தாய்வுக் கூட்டம் சென்னை பிராட்வேயிலுள்ள மா உலா தலைமையகத்தில் நடைபெறவுள்ளது தவறாமல் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு
மா உலா நிர்வாகம்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் : 9003205336 / 9840423404 /7448442424

மா உலா பைக் டாக்ஸியில் பதிவு செய்ய